தண்ணீரில் ஊறவைத்த உலர் திராட்சையில் இத்தனை நன்மைகளா? தி
பிரியாணி, பாயசம் மற்றும் ஸ்வீட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் உலர் திராட்சையை சுவைக்காக நாம் பயன்படுத்துவதுண்டு. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளமையினை நீங்கனள் அறிவீர்களா?
உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் (Anti-oxidants), விட்டமின்கள், தாமிரம், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், கல்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
அதிலும் உலர்ந்த திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் அதன் ஊட்டச்சத்து அதிகமாகிறது.
அப்படியே சாப்பிடுவதை காட்டிலும் ஊறவைத்து சாப்பிடும் போது உடல் அதில் உள்ள சத்துக்களை முழுமையாகவே உறிஞ்சிவிடும்.
ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்
உணவில் அன்றாடம் திராட்சையை எடுத்துகொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டிலிருந்து காத்துகொள்ளலாம்.
உலர்ந்த திராட்சையில் கலோரிகள் மிக குறைவாக உள்ளது. இது நார்ச்சத்து கொண்டவை. தினசரி இதை சிறிய அளவு எடுத்துகொள்ளும் போது இது நீண்ட நேரம் வயிற்றை முழுமையாக உணர வைக்கிறது. இதனால் இவை எடை இழப்புக்கும் உதவுகிறது.
உலர் திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் கண் பார்வைக்கு தீங்கு விளைவிக்கும் கண் தசைகளின் சிதைவை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது.
இது ஒட்டுமொத்த கண்பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எலும்புகள் பலவீனமாக மாறுவதை தடுக்க எலும்பை பலமாக வைத்திருக்க உலர் திராட்சை எடுக்கலாம். இதில் எலும்பை வலுப்படுத்த உதவும் கால்சியம் உள்ளது.
மேலும் இதனை சாப்பிடுவது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. வாதம் மற்றும் வாதத்தின் அபாயத்தையும் குறைக்கிறது. உலர் திராட்சையை ஆரோக்கியமான முறையில் உட்கொள்வது மலச்சிக்கலை போக்கவும், குடல் இயக்கத்தை சீராக்கவும் வைத்திருக்க உதவும்.
உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுப்பொருள்களை வெளியேற்றவும் உதவும். உலர் திராட்சையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் திரவங்களை வெளியேற்ற செய்கிறது.
இது உடலில் உள்ள பிஹெச் அளவை சமநிலைப்படுத்துகின்றன. இது இரத்தத்தின் நச்சுத்தன்மை மற்றும் பல உள் பிரச்சனைகளை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை குறைக்கவும் உதவுகிறது.
உலர் திராட்சையில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும் தொற்றுநோயை எதிர்த்துப்போராட உதவுகின்றன.