கீரையில் பல நன்மைகள் மறைந்துள்ளது.
கீரையில் பல நன்மைகள் மறைந்துள்ளது. ஆனால் சிலர் கீரையை உணவாக சாப்பிடுவது மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். கீரை சாப்பிடுவதால் கண் பார்வைக்கு துணைபுரிவதுடன், விழித்திரையின் மாகுலர் சிதைவு அபாயத்தையும் குறைக்கின்றன.
உண்மையில் கீரை சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்ன கிடைக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..
நன்மைகள்:-
உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன. நம் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி1, இ, கே ஆகியவை கிடைக்கின்றன. கீரைகளில் உள்ள கரோட்டினாய்கள் வைட்டமின் ஏவாக மாற்றப்பட்டு உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் இயக்கத்துக்கு நார்ச்சத்து மிக மிக அத்தியாவசியமாகும். அந்த நார்ச்சத்து கீரைகளில் அதிகளவு கிடைக்கின்றன. செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு கீரைகளில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.
உணவு பழக்க வழக்க மாறுபாட்டால் இதய பிரச்சனைகள் வாழ்வியல் நோயாக மாறியுள்ளது. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவுகளை சுவைக்காக மட்டும் எடுத்துக்கொள்வதால் இதயப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது நமது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்கிறது. இவை இருதய நோய்க்கு காரணமாக அமைவதுடன் டி.என்.ஏகளையும் சேதப்படுத்துகின்றன. இதனால் உடலில் புற்றுநோய் உருவாக அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. கீரையில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி மிகப்பெரிய நோய் அபாயத்தில் இருந்து காக்க உதவுகின்றன.