ஊரியன்வட்டை ஆற்றில் ஆணின் சடலம்!
மட்டக்களப்பு – கிரான் ஊரியன்வட்டை ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
சடலமாக மீட்கப்பட்டவர் வாகனேரி குளத்துமடுவையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முருகேசு செல்லத்துரை (வயது – 55) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை காலை மாடு மேய்ப்பதற்காக சென்றவர் அன்று மதியம் தொடக்கம் அவரது கையடக்கத் தொலை பேசியில் பதில் எதுவும் கிடைக்காத நிலையில் குடும்ப உறவினர்களும் மாட்டின் உரிமையாளரும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் அன்று மாலை முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை ஊரியன்வட்டை ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவ் விடத்திற்கு வருகை தந்த கோறளைப்பற்று திடீர் மரண விசாரனை அதிகாரி வடிவேல் ரமேஸ் ஆனந்த் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கமைய சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.