யாழ்.சிறுப்பிட்டியில் ஹெலியில் வந்து பிறந்தநாள் கொண்டாடிய பெண்.
கொழும்பில் இருந்து யாழிற்கு உலங்கு வானூர்தியில் வந்திறங்கிய பெண் தொடர்பிலான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த பெண்ணின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அவரது பிள்ளைகள் சர்ப்பரைஸாக இந்த ஏற்பாட்டினை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த பெண்ணை பார்வையிட பெருமளவான மக்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சிறுப்பிட்டில் பெரும் செலவு செய்து ஒரு பொம்பிளை தனது பிறந்தநாளைக் கொண்டாடியது பெரும் பரபரப்பையும் பலரது விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது