யாழில் அதிகரிக்கும் தங்கத்தின் விலை
யாழில் இன்று தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு பவுண் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக இன்று காணப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை (28-12-2021) இதன் விலை ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாவாக இருந்தது. ஒரு பவுண் 24 கரட் தூய தங்கத்தின் விலை இன்று ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்டது.
சர்வதேச ரீதியில் ஏற்பட்ட கொரேனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச சந்தையில் தளம்பல் நிலைமை காணப்படுகின்றது.
இதனால் தங்கத்தின் விலையிலும் தளம்பல் காணப்படுகின்றது. தற்போது இலங்கையின் டொலர் கையிருப்பு குறைந்துள்ள நிலையில், அதுவும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்துகின்றது.