இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் பேர் வேலைக்காக வெளியேற்றம்
2021 ஆம் ஆண்டளவில் 100,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் இலக்கை ஏற்கனவே டிசம்பர் முதல் வாரத்தில் தாண்டிவிட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள கொவிட் 19 தொற்றுநோயைத் தொடர்ந்து, இலங்கைக்கான அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமான வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை வீழ்ச்சியடைந்தது.
ஒவ்வொரு வருடமும் சராசரியாக 200,000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாகவும், 2020 ஆம் ஆண்டளவில் இது 53,000 ஆகக் குறையும் எனவும் பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
போட்டி நிறைந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் புதிய போக்குகளை உணர்ந்து, பணியகம் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான அதன் புறப்படுதலை விரைவுபடுத்தியது, வேலை சந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட தொழிலாளர்களை தயார்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது, அத்துடன் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்ப்புகளை வழங்குவதற்கு அது எடுத்த ஊக்கம். அவர்கள் வெளிநாடு செல்லும் நாட்டிற்கு பொருத்தமான கோவிட் தடுப்பூசி என்பவற்றை செயற்படுத்தியதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.