இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒமிக்ரோன் வைரஸ் குறித்து

pinterest sharing button
email sharing button
sharethis sharing button

இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா வகை வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர  குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர் சந்திம ஜீவந்தர, தனது ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு  பதிவேற்றியுள்ளார். குறித்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்று மேற்கொண்ட பரிசோதனையில் ஒமிக்ரோன் பற்றிய இந்தத் தகவல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் நோய்த்தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாவிட்டாலும் பூஸ்டர் தடுப்பூசி  ஊடாக அதில் இருந்து பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும், இந்த வைரஸ் குறித்து  உறுதியான முடிவுக்கு வர முடியாது. ஆகவே அதனை ஆய்வு செய்வதற்கு அதிக நேரமும் தரவுகளும் தேவைப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert