பஸ் மீது மோதியது டிப்பர்! – வரணியில் மூவர் காயம்.
தென்மராட்சி – வரணிப் பகுதியில், இன்று மதியம், பயணிகள் பஸ் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்தில், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள், வரணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.