யாழ். பெண் பரிதாபமாக பலி..!
கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
56 வயதான தமிழ் பெண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடு ஒன்றிலிருந்து வெளியேறிய கார் குறித்த பெண் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செவ்வாயக்கிழமை காலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதியில் நடந்து சென்றுக்கு கொண்டிருந்த பெண் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். எனினும் விபத்தை ஏற்படுத்தியவர் அவ்விடத்தில் இருந்து தப்பி செல்லாமல் பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பீல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்திற்கு அடியில் இருந்த பெண்ணை வெளியே எடுத்து தீவிர சிகிச்சையளித்து காப்பாற்ற முயற்சித்த போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்த சம்பவத்தின் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.