மேஷ ராசிக்கு இடம்பெயரும் ராகு : இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிக்கவுள்ள பெரும் அதிர்ஷ்டம்!
நமது வாழ்க்கையில் நவகிரகங்களின் நிலைகள் ஒவ்வொன்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில கிரகங்கள் புனிதமானதாகவும், சில கிரகங்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன. அந்த வரிசையில் சனிக்கு அடுத்தபடியாக இருப்பது ராகு. ஒருவரது ஜாதகத்தில் ராகு மோசமான நிலையில் இருந்தால், அது அந்நபரை பல இன்னல்களை சந்திக்க வைக்கும் மற்றும் பல மோசமான விஷயங்களை செய்யத் தூண்டும். எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ராகு தனது ராசியை மாற்றவுள்ளதால், பல ராசிகளுக்கு கெட்ட பலன்களும், சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் கிடைக்கப் போகின்றன. இந்த ராகு ஒருவருக்கு பல கஷ்டங்களைக் கொடுத்தாலும், சில நேரங்களில் ராகுவால் சிறப்பான பலன்களையும் கொடுக்கும். சனியைப் போலவே ராகுவும் மெதுவாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார். ராகு ஒரு கிரகம் இல்லாவிட்டாலும், இது ஒரு நிழல் கிரகம். இது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 1.5 வருடங்கள் ஆகும். தற்போது ராகு ரிஷப ராசியில் உள்ளார். எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சியானது மேஷ ராசியில் நிகழ்கிறது. இந்த ராகு மேஷ ராசியில் எப்போது இடம் மாறப் போகிறது மற்றும் ராகு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேஷ ராசிக்கு ராகு எப்போது இடம் மாறுகிறது: ராகு 18 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களுக்குப் பிறகு, மேஷ ராசிக்கு நகரவுள்ளது. எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ராகு ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 10.36 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகிறது. பொதுவாக ராகு பின்னோக்கி தான் நகர்வார். பின்னோக்கி மட்டுமே பயணிப்பார். இப்போது ராகு பெயர்ச்சியால் எந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறப் போறார்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். மிதுன ராசி : எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ராகு பெயர்ச்சியின் போது மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் திடீரென்று உங்களைத் தேடி பணம் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களின் சம்பளம் அதிகரிக்கும் மற்றும் வியாபாரிகள் தொழிலில் லாபத்தைப் பெறுவார்கள். அதாவது உங்களின் வருமானம் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த ராகு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். கடக ராசி : எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சியின் போது கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் பெருகும் மற்றும் விரிவடையும். நிதி நிலைமை வலுவாகும். இருப்பினும், பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உள்ள உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். துலாம் ராசி : எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சியின் போது, துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும். வேலையில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய உத்தி உருவாகும் வாய்ப்புள்ளது. பயண யோகம் உண்டாகும். ஆனால் திருமண வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விருச்சிக ராசி : எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் இருந்து வெளியேறி 6 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இந்த பெயர்ச்சியின் போது பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்கள் தொழிலதிபராக இருந்தால், நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக ராகு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.