வீடொன்றில் தீவிபத்து!
இங்கிலாந்தின் தெற்கு லண்டன், சுட்டொன் Sutton என்ற இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கொலிங்வூட் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவல் ஏற்பட்ட பின்னர் அதனை அணைப்பதற்கு சுமார் 8 தீயணைப்பு படைப்பிரிவுகள் முயற்சித்தன.
அத்துடன் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட இந்த 4 சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தநிலையில் உயிரிழந்த சிறுவர்கள் 4 பேரும் உறவினர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.