$10 மில்லியன் லொட்டரியில் விழுந்ததை கவனிக்காமல் இருந்த நபர்
கனடா
Share this article:683kShars Share Tweet
கனடாவில் $10 மில்லியன் பரிசு லொட்டரியில் விழுந்ததை கவனிக்காமல் இருந்த நபர் ஒருவழியாக தனக்கு பரிசு விழுந்தது என்பதை உணர்ந்து பணத்தை பெற்று கொண்டுள்ளார். மணிடோபாவை சேர்ந்தவர் ஜெப் மோர்டன் (64). இவருக்கு தான் லொட்டரியில் $10 மில்லியன் பரிசு விழுந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதமே அவருக்கு இந்த பரிசு விழுந்துள்ளது, ஆனால் அந்த கோடிக்கணக்கான பரிசு கிடைக்க காரணமான டிக்கெட் அவர் வீட்டு அலமாரியில் இருந்தும் அவர் பல மாதங்களாக கவனிக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அதை கண்டுபிடித்து பரிசை பெற்றுள்ளார். ஜெப் கூறுகையில், மணிடோபாவில் $10 மில்லியன் பரிசு யாருக்கோ விழுந்தது எனவும் அதை யாரும் உரிமை கோரவில்லை எனவும் வானொலியில் தகவல் கேட்டேன்.
ஆனால் அந்த வெற்றியாளர் நான் என நினைத்து கூட பார்க்கவில்லை, எனக்கு எப்படி இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும் என நினைத்து தான் டிக்கெட்களை சரி பார்க்காமல் இருந்துவிட்டேன்.
பரிசு பணத்தில் சில பில்களை செலுத்துவதைத் தவிர, அதை செலவழிப்பதற்கான பெரிய திட்டங்கள் எதுவும் இப்போதைக்கு என்னிடம் இல்லை. அடுத்த கோடையில் எனக்கு 65 வயதாகும் முன் பணியில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என கூறியுள்ளார்.