நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடித வரைவுக்கு இணக்கம்?
13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் தொடராக மாகாணசபைத் தேர்தலை நடத்த வலியுறுத்துவதுடன் சமஸ்டித் தீர்வை நோக்கி நகர்தல் என்ற சாராம்சத்துடன் இந்தியாவுக்கு கடிதம் அனுப்புவதற்கு, தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரெலோவின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் கொழும்பில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பில் குறித்த இணக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
13 ஆவது திருத்தச்சட்டமா? சமஸ்டியா? என்ற இழுபறி நிலையில் கூட்டத்தில் கார சாரமான விவாதங்கள் நடைபெற்றிருந்த நிலையில் இன்று மாலை அனைத்து தரப்பும் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த வரைவு இன்று இரவு கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் நாளை கைச்சாத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய கூட்டத்தில், கட்சித் தலைவர்களான இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம், மாவை சேனாதிராஜா, மனோ கணேசன், அமீர் அலி, சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிறேமச்சந்திரன், எம்.சிறீகாந்தா உள்ளிட்டவர்கள்