நாத்திகத்தை ஊக்குவித்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை – சவுதி அரேபிய அரசு
சமூக வலைதள பதிவில் நாத்திகத்தை ஊக்குவித்தவருக்கு சவுதி அரேபிய அரசு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவலில், சவுதியில் உள்ள ஏமன் நாட்டைச் சேர்ந்த அலி அபுலுகும் என்பவர் இரு ட்விட்டர் கணக்குகள் மூலம் மத நம்பிக்கையை விமர்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சவுதி நீதிமன்றம், அவரது பதிவுகள் சமய எதிர்ப்பு, சமய நம்பிக்கையின்மை மற்றும் நாத்திகத்தை ஊக்குவித்ததாக இருப்பதாக கூறியது. இதையடுத்து அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.