சாதனை படைக்கும் நோக்கோடு உலகத்தை விமானத்தில் சுற்றும் இளம் பெண் சாரா ரதர்போர்ட் இலங்கை சென்றடைந்தார்

சாதனை படைக்கும் நோக்கோடு உலகத்தை விமானத்தில் சுற்றும்; இளம் பெண் சாரா ரதர்போர்ட் இன்று செவ்வாய்க்கிழமையன்று 28ம் திகதி இலங்கை சென்றடைந்தார். கட்டுநாக்க விமான நிலையத்தில் அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகவர் நிறுவனத்தினர் அவரை வரவேற்று தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி பெல்ஜியத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய 19 வயதான சாரா ரதர்போர்ட், உலக சாதனை படைக்கும் நோக்கில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட 19 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சாரா ரதர்போர்ட் இன்று பிற்பகல் இலங்கை சென்றடைந்தார்.

நாட்டை வந்தடைந்த அவர் தனது அடுத்த பயண இலக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார்.

மூன்று மாதங்களில் ஐந்து கண்டங்களில் உள்ள 52 நாடுகளுக்கு செல்வதே அவரது இலக்கு ஆகும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert